திருப்போரூரில் 28-ந்தேதி எடப்பாடி பழனிசாமி பிரசார பயணம்


திருப்போரூரில் 28-ந்தேதி எடப்பாடி பழனிசாமி பிரசார பயணம்
x

175 சட்டமன்ற தொகுதிகளில் பிரசார சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி முடித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது.

கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி ‘‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’’ என்ற பெயரில் பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதுவரை பல்வேறு கட்டங்களாக 175 சட்டமன்ற தொகுதிகளில் பிரசார சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி முடித்துள்ளார்.

இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி சென்னையை அடுத்த திருப்போரூரில், எடப்பாடி பழனிசாமி ‘‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’’ என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். திருப்போரூர் ரவுண்டானா அருகில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடையில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இதற்காக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

1 More update

Next Story