எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விபரம் வெளியீடு

7, 8 ஆகிய தேதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விபரம் வெளியீடு
Published on

சென்னை,

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அடுத்த கட்ட தெர்தல் பிரசார சுற்றுப்பயண விபரங்களை அதிமுக வெளியிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி, `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக `புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்’ என்ற பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, 7.3.2026, 8.3.2026 ஆகிய தேதிகளில், கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டு உள்ளவாறு, பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.

‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’

தேதி / கிழமை கழக அமைப்பு மாவட்டம் தொகுதி பிரச்சாரம் நடைபெறும் நேரம்

7.3.2026, சனிக்கிழமை,

ஈரோடு புறநகர் மேற்கு அந்தியூர், மாலை 4.30 மணி

8.3.2026, ஞாயிற்றுக்கிழமை

ஈரோடு புறநகர் கிழக்கு பெருந்துறை மாலை 4 மணி; பவானி மாலை 5.30 மணி

எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்திற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

‘எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தின்’ போது, சம்பந்தப்பட்ட கழக மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள்; கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com