எடப்பாடி பழனிசாமியின் அசையும் சொத்து மதிப்பு ரூ.50 லட்சம்

எடப்பாடி பழனிசாமியின் பெயரில் எந்த விதமான விவசாய நிலங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமியின் அசையும் சொத்து மதிப்பு ரூ.50 லட்சம்
Published on

சேலம்,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்து உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய எட்டு நாட்கள் இருந்த நிலையில் அதில் நான்கு நாட்கள் விடுமுறை தினங்கள் இருந்ததால் இன்று ஏராளமான வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். கடைசி நாளான இன்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் பெயரில் எந்த விதமான விவசாய நிலங்களும் இல்லை. அசையும் சொத்து ரூ.50 லட்சம் மற்றும் அசையா சொத்து என்று எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அவருடைய மனைவி ராதா பெயரில் ரூ.3.45 கோடி அசையா சொத்துகளும், ரூ.2.16 கோடி அசையும் சொத்துக்களும் உள்ளது என எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com