வாக்கு எண்ணிக்கையில் சூழ்ச்சி நடைபெறவுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது கண்டனத்திற்குரியது என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
வாக்கு எண்ணிக்கையில் சூழ்ச்சி நடைபெறவுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
Published on

சென்னை,

எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

திமுக ஆட்சிக்கு வந்த ஒன்பது மாதங்களில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது கண்டனத்திற்குரியது. ஆனால் அனைத்தையும் சட்ட ரீதியில் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. மடியில் கனமில்லையேல் வழியில் பயமில்லை.

நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றாலும், தோற்றதாகவே அறிவிக்க சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதனால், நாளை வாக்குஎண்ணிக்கையின்போது கவனமாக இருக்கவேண்டும்.

வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும், பின்னர் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் வாக்குகளை எண்ணி வெற்றிபெற்றவர்களை அறிவிக்க வேண்டும். பின்னிரே அடுத்த வார்டுக்கான வாக்குகளை எண்ண வேண்டும். தேர்தல் ஆணையர்களும், அலுவலர்களும் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நடத்தவேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com