அரசு பள்ளிகளில் மாணவர்களின் உடல்நலம் குறித்த தகவல்களை சேகரிக்க கல்வித்துறை உத்தரவு

மாணவர்களை ஆசிரியர்களும், மாணவிகளை ஆசிரியைகளும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் உடல்நலம் குறித்த தகவல்களை சேகரிக்க கல்வித்துறை உத்தரவு
Published on

சென்னை,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உடல்நலம் குறித்து ஆய்வு செய்து தகவல்களை சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உடல்நல சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மாணவர்களை ஆசிரியர்களும், மாணவிகளை ஆசிரியைகளும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆய்வின் போது மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் உடல்நல பாதிப்பு கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சைகள் அளிப்பதற்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com