பள்ளிக்கல்வித்துறையின் 'எமிஸ்' இணையதளம் 5 ஆண்டுகளாக முறையாக பயன்படுத்தப்படவில்லை - சி.ஏ.ஜி. அறிக்கை

‘எமிஸ்’ ஒரு பயனுள்ள கண்காணிப்பு கருவியாக செயல்படவில்லை என சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் 'எமிஸ்' இணையதளம் 5 ஆண்டுகளாக முறையாக பயன்படுத்தப்படவில்லை - சி.ஏ.ஜி. அறிக்கை
Published on

சென்னை,

பள்ளிக்கல்வித்துறையின் 'எமிஸ்' இணையதளம் 5 ஆண்டுகளாக முறையாக பயன்படுத்தப்படவில்லை என சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 2016-ல் இருந்து 2021 வரையிலான ஆண்டுகளில் தனியார் பள்ளிகளை பொறுத்தவரை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் நடத்திய ஆய்வுகளில் கணிசமான குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது.

பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம், கழிப்பறை உள்ளிட்ட தேவையான உள்கட்டமைப்பு வசதி குறைபாடுகள் குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சி.இ.ஓ. மற்றும் டி.இ.ஓ. தனியார் பள்ளிகளை ஆய்வு செய்ததற்கான எந்த பதிவையும் முறையாக பராமரிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் நிகழ்நேர தரவுகள் இல்லாததால் மாவட்டங்களின் சி.இ.ஓ.க்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இலவச பொருட்களுக்கு தொகுக்கப்பட்ட வேண்டிய நிலை இருந்ததாகவும், மொத்தத்தில் 'எமிஸ்' ஒரு பயனுள்ள கண்காணிப்பு கருவியாக செயல்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதிரி பள்ளிகளில் தணிக்கைக்கு அளிக்கப்பட்ட தகவல் உண்மை நிலையுடன் பொருந்தவில்லை என தெரிவித்துள்ள சி.ஏ.ஜி., கண்காணிப்பில் உள்ள குறைபாடுகளால் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் தாமதமாக வழங்க வழிவகுத்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com