கர்நாடகத்தில் கல்வி காவி மயமாக்கப்பட்டு வருகிறது- பா.ஜனதா எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் வேதனை

கர்நாடகத்தில் கல்வி காவி மயமாக்கப்பட்டு வருகிறது என்று பா.ஜனதா எம்.எல்.சி எச்.விஸ்வநாத் வேதனை அடைந்துள்ளார்.
கர்நாடகத்தில் கல்வி காவி மயமாக்கப்பட்டு வருகிறது- பா.ஜனதா எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் வேதனை
Published on

பெங்களூரு:

கர்நாடகத்தில் கல்வி காவி மயமாக்கப்பட்டு வருகிறது என்று பா.ஜனதா எம்.எல்.சி எச்.விஸ்வநாத் வேதனை அடைந்துள்ளார்.

கர்நாடக பா.ஜனதா கட்சியை சேர்ந்த எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து பகத்சிங், நாராயணகுரு போன்றோரின் வரலாறுகள் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சரியல்ல. கர்நாடக பாடநூல் குழு தலைவர் ரோகித் சக்ரதீர்த்த, மத அடிப்படையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து வருகிறார். இது சரியல்ல. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள அந்த பாடநூல் குழுவை ரத்து செய்ய வேண்டும்.

அந்த குழுவில் கல்வியாளர்கள், பெற்றோர்கள் இல்லை. முன்பு இருந்த பாடத்திட்டம் முழுவதும் சரியாக இருந்தது என்று நான் சொல்லவில்லை. அதிலும் சில தவறுகள் உள்ளன. அந்த தவறுகளை சரிசெய்வதை நான் எதிர்க்கவில்லை. கர்நாடகத்தில் கல்வி காவி மயமாக்கப்பட்டு வருகிறது. இதை நிறுத்த வேண்டும். பாடத்திட்டங்கள் ஜனநாயக ரீதியில் அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு எச்.விஸ்வநாத் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com