

சென்னை,
சென்னை கொளத்தூரில் இந்து சமய அறநிலையத்துறையின் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனைதொடர்ந்து கல்லூரி திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
என்னை நினைத்து நானே பெருமைக்கொள்ளக்கூடிய நாள் இன்று. சிறந்த கல்லூரியை திறந்துவைத்திருக்கிறேன்
உலகத் தரத்தில் சிறப்பாக கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்,
கல்வி தான் கடவுள், மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். கல்வி தான் உங்கள் வாழ்க்கையை உயர்த்தும். அதுதான் உங்களுக்கு எல்லாத்தையும் கொடுக்கும்.
அதனாலதான் எல்லா இடங்களிலும் சொல்றேன். படிங்க..படிங்க...படிங்க. அதுதான் உங்களை உயர்த்தும்.
எல்லாருக்கும் இது பிப்ரவரி மாதம். ஆனா திமுகவுக்கு இது மாநாடு மாதம். அந்தளவுக்கு கடந்த 20 நாட்களாக தமிழ்நாடு முழுக்க மாநாடுகளில் பங்கேற்று வருகிறேன். கொளத்தூர் தொகுதிக்காக உழைப்பதில் எனக்கு தனி உற்சாகம் கிடைக்கிறது.
எந்தக் குடும்பத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்களில் ஒருவராவது அரசின் திட்டத்தால் பயனடைந்திருப்பார்கள்.
தமிழ்நாடு தேர்தலில் பலமுனை போட்டி இருக்கலாம். ஆனால் பலம் பொருந்திய போட்டியாக இல்லை. என்றார்.