கைதிகளுக்கு கல்வி உபகரணம்

கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு கல்வி உபகரணம் வழங்கப்பட்டது.
கைதிகளுக்கு கல்வி உபகரணம்
Published on

கடலூர் முதுநகர்

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில், வேலூர் மத்திய சிறையில் அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டத்தை தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் தமிழ்நாடு கல்வித்துறை மற்றும் பள்ளி சாரா வயது வந்தோர் எழுத்தறிவு திட்டம் சார்பில், சிறைவாசிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் பழனி, உதவி திட்ட அலுவலர் சரவணகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை சிறைவாசிகளுக்கு வழங்கினார்கள். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நசீம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் உமா ஆகியோர் திட்டம் குறித்து விளக்கம் கொடுத்தனர். இதில் சிறை அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com