

சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் உள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நந்தவனத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு சிங்கம்புணரி வட்டார நகர் காங்கிரஸ் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி தலைமையில் நகர் காங்கிரஸ் தலைவர் தாயுமானவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில இலக்கிய அணி சிங்கை தர்மன், திருமாறன், பழனிவேல் ராஜன், சேவுகன், குழந்தைவேல் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாடார் உறவின் முறையினர் நாடார் தெருவில் இருந்து ஆளுயர மாலை சுமந்து கொண்டு பெரிய கடை வீதி வழியாக ஊர்வலமாக வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்கள்.