பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்

பெரியகுளத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்
Published on

பெரியகுளம் நகர தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தென்கரையில் உள்ள புத்தர் பள்ளியில் நடந்தது. அதில் மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக ரொட்டி, பால், நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்க நகர தலைவர் தினேஷ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முகமது வாஜித், பொருளாளர் டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மதன், தாமரைக்குளம் பாண்டி, மது ஆஷிப், ராகவன், வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் தென்கரை மூன்றாந்தல் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com