மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
Published on

காரைக்குடி

காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் கல்வித் திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு பேரவையின் சிவகங்கை மாவட்ட செயலாளர் மாயன் ரமேஷ் தலைமை தாங்கினார். இளைஞரணி செயலாளர் சிவா முன்னிலை வகித்தார். டாக்டர் பிரபு குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி மண்டல செயலாளர் சாயல் ராம் சிறப்பு உரை நிகழ்த்தினார். பேரவையின் மாவட்ட தலைவர் வேல்முருகன் வாழ்த்துரை வழங்கினார். மாநில துணைச் செயலாளர் ராஜா, துணை தலைவர் தங்க முருகன், முல்லை நில தமிழர் விடுதலை கட்சியின் நிறுவனர் கண்ணன், தமிழ்நாடு வியாபாரி சங்க பேரவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் 130 பேருக்கு 5 கிலோ அரிசி தொகுப்பினையும், 60 மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உபகரணங்களையும் வழங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக கேரளா வைத்திய சாலை டாக்டர் ஜெபக்குமார், தொழிலதிபர்கள் ராஜாராம் பாண்டியன், லோகநாதன், முருகேசன், வாசு. தேன்மொழி சண்முகம், பேரவையின் வக்கீல் சரவணன் பேரவையின் நகரத்தலைவர் பாண்டிச்சல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர் சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் பாண்டி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com