மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

திசையன்விளையில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
Published on

திசையன்விளை:

திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்க ஆண்டு விழாவை முன்னிட்டு நந்தன்குளம் நோபிள் ஆரம்ப பள்ளி, செல்வ மருதூர் இந்து தொடக்கப்பள்ளி, அழகியவிளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா அந்தந்த பள்ளிகளில் நடந்தது. சங்க தலைவர் ஆனந்தராஜ் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். ராதாபுரம் வட்டார கல்வி அலுவலர் கருணாமூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர் நடேஷ் அரவிந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com