மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி சுற்றுலா

மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி சுற்றுலா
Published on

அரியலூர் மாவட்டத்தில் மனவளர்ச்சி குறைபாடுடைய மற்றும் செவித்திறன் குறைபாடுடைய இளம் சிறார்களுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களுடன் வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார் மற்றும் கீழப்பள்ளம் ஆகிய ஆகிய இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பஸ்சில் சுற்றுலா சென்று சுற்றிப்பார்த்தனர். இந்த கல்வி சுற்றுலா பயணத்தில் 35 இளம் சிறார்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சென்றனர். முன்னதாக அவர்களது பயணத்தை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து அரியலூர் ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தட்சிணாமூர்த்தி மற்றும் உதவி சுற்றுலா அலுவலர் சரவணன் மற்றும் பெற்றோர்கள் மற்றும் மைய சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com