முதல்-அமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஈழத்தமிழர்கள்

ஈழத்தமிழர்கள் குறித்து விடுதலைச்சிறுத்தைகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை, முதல்-அமைச்சர் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றுமாறு கோருகிறோம் என வன்னி அரசு தெரிவித்தார்.
வன்னி அரசு
Published on

சென்னை,

சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சருக்கு ஈழத்தமிழர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிடுங்க அண்ணா!'

திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் ஊராட்சியில் புதிதாக ஈழத்தமிழர் மறுவாழ்வு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ள நிலையில், அருகில் அமைந்துள்ள பழைய முகாம்களில் வாழும் மக்களின் கோரிக்கையினை ஏற்று புதிய குடியிருப்புகளை நேற்று பார்வையிட்டோம்.

வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன

கலசப்பாக்கம் வட்டம் தென்பள்ளிப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள முகாமில் வசிக்கும் 160 குடும்பங்கள் மற்றும் துரிஞ்சாபுரம் வட்டம் காரியந்தல் முகாமில் வசிக்கும் 92 குடும்பங்கள் என மொத்தம் 252 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மக்கள் முறையிட்டனர்

புதிய வளாகத்தில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவுநீர் வெளியேற்றும் வசதி, குறைவான கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டி, அங்கன்வாடி உள்ளிட்ட தேவைகள் இன்னும் நிறைவுபெறாமல் உள்ளதாக மக்கள் முறையிட்டனர். அனைத்து கோரிக்கைகளும் உரிய துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என்று மக்களிடம் உறுதி அளித்தேன்.

பிறந்தநாள் வாழ்த்து

கடும் மழை பெய்து கொண்டிருந்த போதும், திரளான மக்கள் எம்மை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். அங்கிருந்து விடைபெறும் போது, ‘முதலமைச்சருக்கு ஈழத்தமிழர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிடுங்க அண்ணா’ என்று பெண்கள் கூட்டாக தெரிவித்தனர். இன்று சட்டப்பேரவையில் உரையாற்றும்போது, ஈழத்தமிழர்கள் சொல்லி அனுப்பிய வாழ்த்தினை அவையில் பகிர்ந்து கொண்டேன்.

கோரிக்கை

மறுவாழ்வு முகாம்களில் வாழும் ஈழத்தமிழர்கள் மற்றும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் குறித்து விடுதலைச்சிறுத்தைகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை, முதல்-அமைச்சர் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றுமாறு கோருகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com