

நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை நேற்றை நிலவரப்படி 650 காசுகளாக (ரூ.6.50) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 20 காசுகள் குறைக்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 630 காசுகளாக (ரூ.6.30) குறைந்துள்ளது.
இதன் காரணமாக, சென்னையில் ஒரு முட்டையின் விலை 710 காசுகளுக்கு (ரூ.7.10) விற்பனை செய்யப்படுகிறது.