

நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 525 காசுகளாக இருந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 530 காசுகளாக அதிகரித்து உள்ளது.
கறிக்கோழி கிலோ ரூ.115-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.70-க்கும் விற் பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்பட வில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.