முட்டை விலை 10 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்தது.
முட்டை விலை 10 காசுகள் உயர்வு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 425 காசுகளாக இருந்து வந்தது. 

இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் , முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதன் விளைவாக முட்டை விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.  இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85-க்கும், கறிக்கோழி கிலோ ரூ.94-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com