நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் உயர்வு

கறிக்கோழி கிலோ ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் உயர்வு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 480 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 20 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 500 காசுகளாக அதிகரித்து உள்ளது.

முட்டைக்கோழி கிலோ ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.7 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.92 ஆக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலை யில் மாற்றம் செய்யப்படவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com