முட்டை விலை கடும் வீழ்ச்சி

முட்டை கொள்முதல் விலை 385 காசுகளாக குறைந்து உள்ளது.
முட்டை விலை கடும் வீழ்ச்சி
Published on

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 405 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். இதன் மூலம் முட்டை கொள்முதல் விலை 385 காசுகளாக குறைந்து உள்ளது.

நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான முட்டைகள் ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகளுக்கு தான் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது அங்கு போர் மேகம் சூழ்ந்துள்ளதால் முட்டை ஏற்றுமதி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தொடர்ந்து முட்டை விலை வீழ்ச்சியடைந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com