நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் சரிவு


நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் சரிவு
x

தமிழகத்தில் முட்டை நுகர்வு குறைந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 560 காசுகளாக இருந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 30 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 530 காசுகளாக குறைந்து உள்ளது.

தைப்பூசம் நெருங்கி வருவதால் தமிழகத்திலும் பொதுமக்கள் இடையே முட்டை நுகர்வு குறைந்து உள்ளது. இதுவே விலை குறைய காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர். கறிக்கோழி விலை கிலோ ரூ.152 ஆக அதிகரித்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.82-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1 More update

Next Story