நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 25 காசுகள் வீழ்ச்சி420 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 25 காசுகள் வீழ்ச்சி420 காசுகளாக நிர்ணயம்
Published on

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 445 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 25 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக குறைந்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.86-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.77-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

வடமாநிலங்களில் ஸ்ராவன் பண்டிகை தொடங்கி விட்டதாலும், தமிழகத்தில் ஆடி மாதம் பிறந்து விட்டதாலும் முட்டை நுகர்வு பொதுமக்கள் இடையே வெகுவாக குறைந்துள்ளது. எனவே முட்டை விற்பனையை அதிகரிக்க விலை குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். கறிக்கோழி விலையில் நேற்று மாற்றம் செய்யாவிட்டாலும் கடந்த 4 நாட்களில் மட்டும் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.17 குறைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com