நாமக்கல் மண்டலத்தில்முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவு4 ரூபாய் 15 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில்முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவு4 ரூபாய் 15 காசுகளாக நிர்ணயம்
Published on

நாமக்கல் மண்டலத்தில் நேற்று முன்தினம் 4 ரூபாய் 35 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 15 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

வெளி மாநிலங்களில் பண்டிகை காலம் முடிய உள்ளதாலும், பிற மண்டலங்களில் முட்டை கொள்முதல் விலை குறைக்கப்பட்டு வருவதன் காரணமாகவும் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.118-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கறிக்கோழி ஒரு கிலோ ரூ.120 ஆக ஆனது.

முட்டைக்கோழி கிலோ ரூ.83-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com