நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 20 காசுகள் உயர்வு420 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 20 காசுகள் உயர்வு420 காசுகளாக நிர்ணயம்
Published on

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 400 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை 20 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை விலை 420 காசுகளாக உயர்ந்துள்ளது.

வடமாநிலங்களில் ஸ்ரவண பண்டிகை விரதம் ஒரு வாரத்தில் முடிவுக்கு வர உள்ளது. எனவே பிற மண்டலங்களில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.122-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.83-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com