ஒரே வாரத்தில் முட்டை விலை 30 காசுகள் உயர்வு...!

நாமக்கல் மண்டலத்தில் ஒரே வாரத்தில் முட்டை விலை 30 காசுகள் உயர்ந்து 545 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரே வாரத்தில் முட்டை விலை 30 காசுகள் உயர்வு...!
Published on

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 545 காசுகளாக உயர்ந்துள்ளது.

கறிக்கோழி கிலோ ரூ.143-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.95-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த ஒரே வாரத்தில் 30 காசுகள் அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிற மண்டலங்களில் முட்டை விலை உயர்வு, உற்பத்தி குறைவு போன்றவையே முட்டை கொள்முதல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com