எழும்பூர் பராமரிப்பு பணி: தென் மாவட்ட ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

திருநெல்வேலியிலிருந்து சென்னை வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் மார்ச் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை எழும்பூர் வராமல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
எழும்பூர் பராமரிப்பு பணி: தென் மாவட்ட ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்
Published on

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் (Platforms) மறுசீரமைப்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, மின்சார ரெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 5 மற்றும் 6-வது நடைமேடைகள் வழியாக இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் சில முக்கிய எழும்பூர் பராமரிப்புப் பணி: தென் மாவட்ட ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து ரெயில்கள் எழும்பூருக்குப் பதிலாகத் தாம்பரத்தில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12661) மார்ச் 17-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும். அதேபோல் மறுமார்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து சென்னை வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12632) மார்ச் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை எழும்பூர் வராமல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

மேலும் எழும்பூரில் இருந்து காலை 8 மணிக்கு திருச்சி நோக்கிப் புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22675) சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் மார்ச் 16 முதல் ஏப்ரல் 5 வரை, வழக்கமான நேரத்தை விட 2 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக, அதாவது காலை 10:15 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் எனத் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

எழும்பூர் நடைமேடை சீரமைப்புப் பணிகள் முடியும் வரை இந்த தற்காலிக மாற்றங்கள் அமலில் இருக்கும் என்பதால், பயணிகள் இதற்கேற்பத் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com