118 ஆண்டுகளை நிறைவு செய்த எழும்பூர் ரெயில் நிலையம்

842 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை எழும்பூர் நிலையம் பிரம்மாண்ட மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எழும்பூர் ரெயில் நிலையம்
Published on

சென்னை,

தென் இந்தியாவின் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றான சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் தனது சேவையை தொடங்கி 118 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. தென் தமிழகத்திற்கான முக்கிய நுழைவாயிலாக விளங்கி வருகிறது இந்த ரெயில் நிலையம்.

சுமார் 17 லட்சம் செலவில் கட்டப்பட்டது

இந்திய ரெயில்வேயின் பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலையின் அடையாளமாக திகழ்கிறது சென்னை எழும்பூர் ரெயில் நிலையம். கடந்த 1908-ஆம் ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி ஆங்கிலேயர்களால் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. சுமார் 17 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் பாரம்பரியமிக்க இந்தோ-சராசனிக் கட்டிடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டது.

உலக தரம்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து போட் மெயில் என்ற முதல் ரெயில் தனுஷ்கோடி வரை இயக்கப்பட்டது. இப்போது ராமேஸ்வரம் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசின் அமிர்த பாரத் திட்டத்தின் கீழ், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை உலக தரத்திற்கு உயர்த்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக சுமார் 842 கோடி ரூபாய் மதிப்பில் இந்த பிரம்மாண்ட மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேக் வெட்டி கொண்டாட்டம்

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 118-வது ஆண்டு நிறைவு விழாவை அங்கிருந்த ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் இணைந்து கேக் வெட்டி மிகவும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com