

சென்னை,
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்த விவாதத்தில் சென்னை எழும்பூர் தொகுதி திமுக உறுப்பினர் பரந்தாமன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.