5-ந்தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு


5-ந்தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு
x

வருகிற 5-ந்தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

சென்னை,

முகமது நபியின் பிறந்த நாளை மிலாடி நபி என இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். அன்று புனித நூலான குரானை வாசிப்பதை முக்கியமான கடமையாக கொண்டுள்ளனர். மேலும், ஏழை மக்களுக்கு உணவு, உடைகளையும் தானமாக வழங்குவார்கள்.

இந்த நிலையில், இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாத பிறை நேற்று தமிழகத்தில் தெரிந்தது. எனவே மிலாடி நபி விழா வருகிற 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி (பொறுப்பு) முகமது அக்பர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story