ஈழத்தமிழர்களுக்கு சுய நிர்ணயம் உரிமை வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

இலங்கையில் அமைதி காண வேண்டும் என்றால் ஈழத்தமிழர்களுக்கு சுய நிர்ணயம் உரிமை வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கு சுய நிர்ணயம் உரிமை வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
Published on

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை நிலைமை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு ஏற்பாடு செய்தமைக்கு வாழ்த்துகிறேன். இலங்கை மக்கள், நபர்களை மாற்றினால் போதும் என்று போராடவில்லை.

அரசியல் சட்டத்தையே மாற்ற வேண்டும் என்று போராடுகிறார்கள். தமிழர்களை நசுக்குவதற்காக சிங்களர்கள் ராணுவத்தை வலுப்படுத்தினார்கள். பல நாடுகளிலிருந்து ஆயுதங்களைப் பெற்றார்கள்.

ஈழத் தமிழர்கள் குடியிருப்பு முழுவதும் ராணுவ மயம்தான். சிங்கள ராணுவம் இனப்படுகொலை செய்தது. தமிழர் பகுதிகளில் இராணுவத்தைக் குவித்து வைத்திருக்கிறது. ஒவ்வொரு தமிழர் வீட்டுக்கு முன்பும் சிங்களச் சிப்பாய் துப்பாக்கியுடன் நிற்கிறான்.

ராணுவம் அங்கிருந்து வெளியேற வேண்டும். வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு சுயநிர்ணயம் வேண்டும். இவை எல்லாம் செய்தால்தான் இலங்கையில் அமைதி காண முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com