சென்னையில் தபால் வாக்கு செலுத்திய முதியோர், மாற்றுத்திறனாளிகள்

தபால் வாக்குகள் பெறும் பணியை 18-ந்தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் தபால் வாக்கு செலுத்திய முதியோர், மாற்றுத்திறனாளிகள்
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான அனைத்து தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தில் 4,085 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் 19 ஆயிரத்து 594 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்.

இதற்கிடையே, தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் நேற்று தங்களின் தபால் வாக்கினை செலுத்தினார்கள். பயிற்சி வகுப்பு நடைபெற்ற 17 இடங்களில் அவர்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தபால் வாக்கு மையத்தில் ஒவ்வொருவராக தங்கள் தபால் வாக்குகளை செலுத்தினார்கள்.

இதேபோல், 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெறும் பணி இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்தவர்கள் முன்கூட்டியே அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர்.

அதன்படி தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து தபால் வாக்குகளை பெற்று வருகிறது. ஒவ்வொரு இடத்திற்கும் 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேரில் சென்று தபால் வாக்குகளை பெற்று வருகின்றனர். இந்த பணியை 18-ந்தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com