

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது வேதாரண்யம் கோவில்பத்து கிழக்காடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(வயது75). மாற்றுத்திறனாளி. இவர் தனது மனைவி ஆண்டாளுடன் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகூர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வயதான தம்பதி போலீசாரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் 2 பேரும் மகள்வழி பேரன் கட்டிய வீட்டில் வசித்து வருகிறோம். வாழ்வாதாரத்திற்காக காய்கறி வியாபாரம் செய்து வருகிறோம். எனது இளைய மகள் மற்றும் அவரது கணவர் ஆகியோர் சேர்ந்து தங்களிடம் சொத்தை கேட்டு பாலகிருஷ்ணனை தாக்கியும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுதொடர்பான உரிய விசாரணை நடத்தி 2 பேரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து வயதான தம்பதி அங்கிருந்து சென்றர்.