விஷம் குடித்து முதியவர் தற்கொலை

திண்டுக்கல் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
Published on

திண்டுக்கல் அருகே மேற்கு மரியநாதபுரம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ஆத்தியப்பன் (வயது 70). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆத்தியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com