பஸ் மோதி முதியவர் சாவு

பேட்டையில் பஸ் மோதி முதியவர் இறந்தார்.
பஸ் மோதி முதியவர் சாவு
Published on

பேட்டை:

பேட்டை வினை தீர்த்த விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வையாபுரி (வயது 65). கூலி தொழிலாளி. இவரது உறவினர் கொண்டாநகரத்தில் வீடு கட்டி வருகிறார். இதனை மேற்பார்வை பார்ப்பதற்காக வையாபுரி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பேட்டை கூட்டுறவு மில் கேட் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மோதியதில் வையாபுரி சம்பவ இடத்திலே பலியானார். தகவல் அறிந்ததும் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வையாபுரி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com