வேன் மோதி முதியவர் சாவு

நாலாட்டின்புத்தூர் அருகே வேன் மோதி முதியவர் இறந்தார்.
வேன் மோதி முதியவர் சாவு
Published on

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள அய்யம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் குருசாமி (வயது 82). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் இளையரசனேந்தல் - திருவேங்கடம் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வேன் எதிர்பாராதவிதமாக குருசாமியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த குருசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்து வந்த நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் குருசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன குருசாமிக்கு ஜெயலட்சுமி (75) என்ற மனைவியும், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com