வாகனம் மோதி முதியவர் பலி

பாளையங்கோட்டையில் வாகனம் மோதி முதியவர் இறந்தார்.
வாகனம் மோதி முதியவர் பலி
Published on

பாளையங்கோட்டை எம்.கே.பி.நகர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 61). இவர் நேற்று காலையில் சட்டக்கல்லூரி அருகில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com