தூத்துக்குடியில் வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் புதிய துறைமுகம்- மதுரை பைபாஸ் ரோடு, மடத்தூர் அருகே உள்ள மேம்பாலத்தில் முதியவர் ஒருவர் வாகனம் மோதி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தூத்துக்குடியில் வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
Published on

தூத்துக்குடியில் புதிய துறைமுகம்- மதுரை பைபாஸ் ரோடு, மடத்தூர் அருகே உள்ள மேம்பாலத்தில் முதியவர் ஒருவர் வாகனம் மோதி இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். நீல நிற லுங்கி, பழுப்பு நிற சட்டையும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. மேலும் அவர் மீது மோதிய வாகனம் எது என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com