மதுராந்தகம் பஸ் நிலையத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் சாவு

மதுராந்தகம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்கு அடியில் தூங்கியபோது பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
மதுராந்தகம் பஸ் நிலையத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் சாவு
Published on

சாவு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிற்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 60 வயது தக்க முதியவர் ஒருவர் தனியார் பஸ்சுக்கு அடியில் தூங்கியுள்ளார். பஸ் டிரைவர் அவர் தூங்கியதை கவனிக்காமல் பஸ்சை இயக்கியதில் அவர் தலை மீது பஸ்சக்கரம் ஏறி தலை நசுங்கி இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

போலீசார் விசாரணை

இது குறித்து மதுராந்தகம் கிராம நிர்வாக அலுவலர் யூசப் அகமது மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கத்திடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் தர்மலிங்கம் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com