தூத்துக்குடியில் சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலி

உடன்குடி பிரதான சாலையில் முதியவர் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் அவரது சைக்கிள் மீது மோதியது.
தூத்துக்குடியில் சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலி
Published on

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகில் உள்ள சொக்கன்விளை, சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சுயம்பு (வயது 70). இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை சுயம்பு உடன்குடியில் இருந்து சைக்கிளில் சொக்கன்விளை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது உடன்குடி பிரதான சாலையில் அவரது சைக்கிள் சென்றபோது எதிரே வந்த ஒரு கார் அவரது சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுயம்பு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com