வாகனம் மோதி முதியவர் சாவு

தூத்துக்குடி அருகே வாகனம் மோதி முதியவர் பலியானார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாகனம் மோதி முதியவர் சாவு
Published on

தூத்துக்குடி அருகே உள்ள மடத்தூர் பகுதியில் பைபாஸ் ரோட்டில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக முதியவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்தவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த முதியவர் எந்த ஊரை சேர்ந்தவர், என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com