தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு பக்திநாதபுரத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தனது வீடு முன்பு பெட்டி கடை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி
Published on

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு பக்திநாதபுரத்தைச் சேர்ந்த கந்தன் மகன் தனுஷ்கோடி (வயது 70). இவர் தனது வீடு முன்பு பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் 3 மணி அளவில் தனது வீட்டில் மொட்டை மாடியில் கிடந்த கொசுவலையை எடுத்து ரோட்டில் வீசினாராம்.

அப்போது வீட்டின் முன்பு சென்று கொண்டிருந்த மின்சார வயரில் அவரது கை பட்டு அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com