அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட முதியவர் சாவு

ராணிப்பேட்டையில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட முதியவர் உயிரிழந்தார்.
அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட முதியவர் சாவு
Published on

ராணிப்பேட்டை பஜார் தெருவில் வசித்து வந்தவர் ஜெகதீசன் (வயது 66). மனநல நோயாளியான இவர் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். கடந்த 14-ந் தேதியன்று வழக்கமாக உட்கொள்ளும் மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதால் மயக்கமடைந்துள்ளார். இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக அவரது மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com