குளத்தில் மூழ்கி முதியவர் சாவு

குளத்தில் மூழ்கி முதியவர் இறந்தார்.
குளத்தில் மூழ்கி முதியவர் சாவு
Published on

திருமயம்:

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மாமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 75). இவர் அப்பகுதியில் உள்ள மலையடி குளத்தில் குளிக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை தேடி மலையடி குளத்திற்கு சென்றனர். அங்கு ஆரோக்கியசாமி நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நமணசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆரோக்கியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com