விபத்தில் காயம் அடைந்த முதியவர் சாவு

விபத்தில் காயம் அடைந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் காயம் அடைந்த முதியவர் சாவு
Published on

நாங்குநேரி:

மூன்றடைப்பு அருகே உள்ள பெத்தானியாவை சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது 83). இவர் கடந்த 20-ந் தேதி மூன்றடைப்பில் இருந்து இளையாமுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார் மோதி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆபிரகாம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com