முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

சிவகிரியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Published on

சிவகிரி:

சிவகிரியை அடுத்த ராயகிரி அருகே உள்ள மேலகரிசல்குளம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 70). இவருக்கு காலில் வாதநோய் இருந்ததால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 6-ந்தேதி அன்று காலில் வலி அதிகமாக இருந்ததால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்ச பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com