முதியவர் தற்கொலை

திண்டுக்கல் அருகே, விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
முதியவர் தற்கொலை
Published on

திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை அருகே உள்ள தென்மலை தும்புசோலை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 60). கூலித்தொழிலாளி. கடந்த சில ஆண்டுகளாக இவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் நோய் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த செல்வம், கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com