மது அருந்த பணம் தர மறுத்ததால் மூதாட்டி அடித்துக்கொலை... பேரன் கைது

மூதாட்டியின் தலையை சுவற்றில் முட்டியும், கொடூரமாக தாக்கியும் கொலை செய்துள்ளார்.
அடித்துக்கொலை
கோப்பு படம்
Published on: 

சேலம்,

மது அருந்த பணம் கேட்டு தர மறுத்ததால் மூதாட்டியை அடித்து கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

அடித்துக்கொலை

சேலம் மாவட்டம் பெரியப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள். அவரது பேரன் விஜி. இவர் போதைக்கு அடிமையாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மது அருந்துவதற்கு பணம் இல்லாததால் பாட்டியிடம் பணம் கேட்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டில் இருந்த பாட்டியிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரத்தில் பாட்டியை சரமாரியாக தாக்கி உள்ளார். அவரது தலையை சுவற்றில் முட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பாட்டி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கொண்டாலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மூதாட்டியை கொடூரமாக தாக்கி கொலை செய்த குற்றவாளி விஜியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com