விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
Published on

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமராஜ். இவருடைய மனைவி பத்மாவதி (வயது 65). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மன விரக்தி அடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பத்மாவதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com