விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
Published on

திங்கள்சந்தை :

ஆளூர் அருகே தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சங்கரன். இவருடைய மனைவி தங்கமணி (வயது 68). தங்கமணி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு அவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com