மரத்தில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை - போலீசார் விசாரணை

மறைமலைநகர் அருகே மரத்தில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரத்தில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை - போலீசார் விசாரணை
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கூடலூர் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சின்ன பாப்பா (வயது 60). இவர் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் முன்பு உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பற்றி தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்ன பாப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com